சத்யம் சினிமாஸின் புதிய திரையரங்கம் 'எஸ் 2'-கமல்ஹாசன் திறந்து வைத்தார்!!!

Saturday, 23rd of June 2012
சென்னை::சத்யம் சினிமாஸ்’ நிறுவனம் பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் ‘எஸ்-2’ என்ற பெயரில் 5 நவீன சினிமா தியேட்டர்களை திறந்துள்ளது. நடிகர் கமலஹாசன் இந்த தியேட்டர்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

‘3டி’, டிஜிட்டல் என நவீன தொழில்நுட்பத்தில் 5 தியேட்டர்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1381 சொகுசு இருக்கைகளுடன் இது உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய தியேட்டரில் 300 இருக்கைகளும், சிறிய தியேட்டர்களில் 222 இருக்கைகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் மாலில் இரண்டாவது தளத்தில் இத்தியேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மூன்று தியேட்டர்களில் இன்று கார்த்தி நடித்த ‘சகுனி’ படம் திரையிடப்பட்டது. மற்ற இரு தியேட்டர்களில் ஆங்கிலம், இந்திப் படங்கள் வெளியாயின.

தியேட்டரை திறந்து வைத்து கமலஹாசன் பேசியதாவது:-

பெரம்பூருக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பரை பார்க்க நான் அடிக்கடி வருவது உண்டு. இன்று பெரம்பூர் முன்புபோல் இல்லாமல் நிறைய மாறி இருக்கிறது. நண்பரின் வீடு அடையாளம் தெரியவில்லை.

1959-க்கு முன் இந்த இடம் நாடக கொட்டகையாக இருந்தது. அதன்பிறகு வீனஸ் தியேட்டராக மாறியது. தற்போது ‘மால்’ ஆகி நவீன தியேட்டர்கள் வந்துள்ளது. சினிமா கலை வேகமாக வளர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

நாடக கொட்டகை இங்கு இருந்தபோது எனது குருநாதர் அவ்வை சண்முகம் நடித்து இருக்கலாம். சிவாஜி நடித்து இருக்கலாம். இப்போது அவர்கள் குழந்தையான கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் இத்தியேட்டரில் வரப்போகிறது. சினிமாவை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இது உதாரணம் ஆகும்.

1980-ல் டி.வி. வந்தபோது தியேட்டர்கள் அழிந்துவிடும் என்றனர். நான் வளரும் என்றேன். நான் சொன்னதுதான் இப்போது நடந்து வருகிறது. டி.வி. மூலம் வீட்டுக்குள் எத்தனை படங்கள் வந்தாலும் மக்கள் வெளியேபோய் படம் பார்ப்பதைதான் விரும்புகிறார்கள்.

‘விஸ்வரூபம்’ படத்தில் சவுண்ட் தொழில்நுட்பத்தில் புதுமை செய்ய உள்ளோம். படங்களில் 5.1, 7.1 அளவுதான் சவுண்ட் தொழில்நுட்பம் இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் முதல் முறையாக 11.1 அளவு சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுதத உள்ளோம். இதற்காக அமெரிக்கா செல்ல உள்ளோம்.

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சத்யம் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சொரூப் ரெட்டி கலந்து கொண்டார்...

நவீன வசதிகொண்ட திரையரங்குகளின் முன்னோடியாக திகழும் சத்யம் திரையரங்க குழுமத்தின் மூன்றாவது புதிய திரையரங்கமான 'எஸ்2 சினிமாஸ்' சென்னை, பெரம்பூரில் நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் மல்ட்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் நிறுவப்பட்டுள்ளது.

சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருந்த பழைய வீனஸ் திரையரங்கத்தை இடித்துவிட்டு தான் இந்த புதிய ஸ்பெக்ட்ரம் மல்ட்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸை கட்டியிருக்கிறார்கள். இதில் பலவிதமான உணவகங்கள், பிக் பசார், குழந்தைகளுக்கான விளையாட்டு தளங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த வளாகத்தில் சத்யம் சினிமாஸ் தனது மூன்றாவது புதிய திரையரங்கமான 'எஸ் 2' திரையரங்கத்தையும் நிறுவியிருக்கிறது.

வட சென்னையில் நிறுவப்பட்டுள்ள முதல் மல்ட்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் திரையரங்கம் ஸ்பெக்ட்ரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திரையரங்கத்தை திறந்து வைத்து பேசிய கமல்ஹாசன், "இந்த புதிய மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ள இந்த இடத்தில் கடந்த 50ஆண்டுகளாக வீனஸ் என்ற திரையரங்கமும், அதற்கு முன்பு 40 ஆண்டுகளாக நாடக கொட்டகை ஒன்றும் இருந்தது. அந்த வகையில் கலை வளர்ந்த பூமி இது. இந்த தலைமுறையிலும் இங்கு ஒரு திரையரங்கம் அதுவும் தற்போதைய தொழில்நுட்பத்தோடு அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சினிமா திரையரங்குகள் கல்யாணம் மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவந்த காலகட்டத்தில் சினிமாவை வேறு ஒரு கோணத்தில் அனுகியவர்களில் நானும், சத்யம் திரையரங்க முழுமத்தினரும் முக்கியமானவர்கள். எந்த தொழிலையும் சிறந்த முறையில் செய்தால் அதில் வெற்றி பெறலாம் என்பதற்கு சத்யம் திரையரங்கத்தினர் ஒரு எடுத்துக்காட்டு. இன்றை காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிகொண்டு திரையரங்க தொழிலில் சாதித்து வருபவர்கள் அவர்கள். நானும் என்னுடைய ஒவ்வொரு படங்களிலும் அதையேதான் பின்பற்றுவேன். அந்த வகையில் விஸ்வரூபம் படத்தில் புதிய கேமரா ஒன்றை கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறோம். அதற்காதான் அமெரிக்கா சென்றேன்.

சினிமாவை வீட்டுக்கே வரவைத்துப் பார்க்கும் காலம் வந்தாலும், திரையரங்குகளில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவத்தை திரையரங்குகள் உருவாக்க வேண்டும். அந்த வேலையை சத்யம் திரையரங்கம் மிகச் சரியாக செய்து வருகிறது." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சதயம் திரையரங்கத்தின் இயக்குநர் சரூப் ரெட்டி, ஸ்பெக்ட்ரம் மாலின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், தலைவர் சிட்டி பாபு, நடிகர் பரத் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

Comments