அஜீத்தின் 'பில்லா 2' ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

Tuesday, 19th of June 2012
சென்னை::அஜீத் நடித்த 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை வயதுக்கு வந்தோர் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம் என விதிமுறைகள் உள்ளன.

அஜித்குமார் இப்படத்தில் தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சாதாரண இளைஞன் ரவுடிகளின் தொல்லைகளுக்கு ஆளாகி பயங்கர தாதாவாக உருவாவதே கதை. இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்தனர்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் கடைசி வாரத்திற்கு தள்ளிவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

'பில்லா 2' படத்தை அஜித்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்...

மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி.!!!

மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி.

விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். 143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

சிறந்த நடிகருக்கான விருது தெய்வத் திருமகள் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் பிரபுதேவா இவ்விருதை வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தமைக்காக அஞ்சலி பெற்றார். சிம்ரன் இவ்விருதை வழங்கினார்.

சிறந்த திரைப்படத்துக்கான விருது எங்கேயும் எப்போதும் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகர் விருதை சந்தானம் பெற்றார். பிடித்தமான நாயகன் விருது அஜீத்துக்கும், பிடித்தமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டன.

சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். பிடித்த படத்துக்கான விருது 'கோ'வுக்கு வழங்கப்பட்டது. கோவை சரளா சிறந்த காமெடி நடிகைக்கான விருதை பெற்றார்.

சிறந்த இயக்குநர் விருது வெற்றி மாறனுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கும் வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் ஆகியோரும் சிறப்பு விருது பெற்றார்கள். சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துக்கும், செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டன.

விழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

Comments