பில்லா 2 - பி‌ரித்து மேய்ந்த சென்சார்!!!

Sunday, 17th of June 2012
சென்னை::பி‌ல்லாவா? சகுனியா? இந்த போட்டியில் முதல் சுற்றில் சகுனிக்குதான் முதலிடம் கிடைத்திருக்கிறது.

ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி சொன்சாருக்கு இல்லை. ஆனால் தோல்விக்கு சென்சா‌ரின் கத்தி‌‌ரி பலமுறை காரணமாகியிருக்கிறது. பில்லா 2 படத்தைப் பார்த்த சென்சார் அதிகா‌ரிகள் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என கஷ்டப்பட்டு எடுத்ததை கஷ்டமே இல்லாமல் வெட்டி எறிந்திருக்கிறார்கள். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்ககூடிய படம் என்று ஏ சான்றிதழ் தந்திருக்கிறார்கள். இது படத்தின் வியாபாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் படத்தின் தயா‌ரிப்பாளர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பில்லா 2 ஜுன் 21 வெளியாகும் என முன்பு கூறப்பட்டது. சென்சார் பி‌ரித்து மேயந்திருக்கும் நிலையில் மறு தணிக்கைக்கு பில்லா டீம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஏதேனும் நடந்தால் பட வெளியீடு மேலும் தாமதமாக வாய்ப்புள்ளது.

Comments