Saturday 9th of June 2012சென்னை::படப்பிடிப்பு என்னும் பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளித்திரையை முதலில் தொடப்போகும் படம் பில்லா 2 அல்லது சகுனி படங்களில் எது என்ற பட்டிமன்றம் தற்போது எங்கு பார்த்தாலும் நடந்து கொண்டிருக்கிறது.
பில்லா 2 படம் தயாராகி வெளியீடுக்காக காத்திருக்கிறது. சகுனியும் அதே நிலையில்தான் உள்ளது. சகுனி படமும் வரும் வெள்ளிக்கிழமை தணிக்கைக் குழுவிற்கு வருகிறது.
இரண்டு படங்களின் தயாரிப்பு வட்டமும் தணிக்கைச் சான்றிதழ் பெற்றதும் வெளியீடு குறித்த தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளன.
போட்டியாக இருந்தாலும் சரி, போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் சரி விருந்து என்னமோ தமிழ் ரசிகர்களுக்குத்தான்..
போட்டியில் வெல்லப் போவது எந்த படம் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
Comments
Post a Comment