படமாகும் விவேகானந்தர் வாழ்க்கை: 20 மொழிகளில் ரிலீஸ்!!!

Tuesday,12th of June 2012
சென்னை:சுவாமி விவேகானந்தரின் வாழ்கையை இயக்குனர் டூட்டு தாஸ் திரைப்படமாக எடுக்கிறார்.

இயக்குனர் டூடு தாஸ் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறார். தி லைட்- விவேகானந்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விவேகானந்திரன் சிறு வயது முதல் உலகப் புகழ் பெற்ற போதகரானது வரை படமாக்குகிறார்கள். இதில் நாடகங்களில் நடிக்கும் தீப் பட்டாசார்யா விவேகானந்தராக நடிக்கிறார். கார்கி ராய் சவுத்ரி என்பவர் சாரதாவாகவும், பிரேமன்கூர் சட்டோபத்யாய் ராமகிருஷ்ணராகவும், கலிபோர்னியாவைச் சேர்ந்த கோர்ட்னி ஸ்டீபன்ஸ் புரூக் நிவேதிதாவாகவும் நடிக்கிறார்கள்.

பெஙகாளி மற்றும் இந்தியில் எடுக்கப்படும் இந்த படத்தை 18 மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். 1983ம் ஆண்டு ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய உலகப் புகழ் பெற்ற உரை கொல்கத்தாவில் உள்ள சரித்திரப் புகழ் பெற்ற டவுன் ஹாலில் எடுக்கப்படுகிறது.

விவேகானந்தரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க வேண்டும் என்று தான் கடந்த 3 ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்ததாக இயக்குனர் தெரிவி்ததார். இந்த படத்தில் 8 பாடல்கள் உள்ளனவாம்.

விவேகானந்தர் ராமேஸ்வரம் சென்றது அங்கிருந்து கன்னியாகுமரி சென்று ஒரு பாறையில் அமர்ந்து நாட்டு நடப்பு பற்றி பேசியது உள்ளிட்டவையும் இந்த படத்தில் உள்ளனவாம். ஆனால் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு பதிலாக வேறு ஒரு பாறையில் படப்பிடிப்பு நடக்கிறது.

Comments