அஜீத் நடிக்கும் பில்லா 2 படம் ஜூலை 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு இரண்டாவது ட்ரைலர் வெளியிடுகிறார்கள்!!!
Saturday, 30th of June 2012சென்னை::அஜீத் நடிக்கும் பில்லா 2 படம் ஜூலை 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு இரண்டாவது ட்ரைலர் வெளியிடுகிறார்கள்.
ஆடியோ வெளியீட்டைக் கூட சத்தமின்றி முடித்துவிட்ட பில்லா 2 தயாரிப்பாளர்கள், சென்சார் பிரச்சினை, பட வெளியீட்டில் நேர்ந்த தாமதம் போன்றவற்றால் படத்தின் மீது விழுந்துள்ள எதிர்மறை அபிப்பிராயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ட்ரைலர் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
வரும் ஜூலை 2-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவிலாவது அஜீத் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர்களால் கூட பதில் சொல்ல முடியவில்லை. இந்த மாதிரி விழாக்களில் பங்கேற்பதை 'சார்' விரும்பமாட்டார்... பிரஸ்ஸை மீட் பண்ணுவதையும் இப்போதைக்கு தவிர்க்கவே முயற்சிப்பார், என அஜீத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
விட்டா படப்பிடிப்புக்கு வரலாமா வேணாமான்னு யோசிப்பாரு போலிருக்கே...!
Comments
Post a Comment