சில்க் பட பிரச்னை தொடர்கிறது : வீணா மாலிக் படத்துக்கு தயாரிப்பாளர் திடீர் எதிர்ப்பு!!!

Thursday, ,May, 17, 2012
ஏக்தா கபூர் தயாரித்த இந்தி படம் ‘தி டர்ட்டி பிக்சர்Õ. இப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி உருவான படம். இந்நிலையில் கன்னடத்தில் தயாராகும் படத்துக்கு ‘தி டர்ட்டி பிக்சர்Õ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நிர்வாண புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கிறார். த்ரிசூல் இயக்குகிறார். இதுவும் சில்க் கதை கொண்ட படம்தான். இந்த தலைப்புக்கு கன்னட பிலிம்சேம்பர் அனுமதி அளித்திருக்கிறது. இதையறிந்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தன்னுடைய பட டைட்டிலை கன்னட படத்துக்கு வைக்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்து கன்னட பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். ‘கடிதம் கிடைத்த 5 நாட்களுக்குள் டைட்டில் வைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்Õ

என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி சேம்பரின் நிர்வாகிகள் குழு ஆலோசித்து வருகின்றனர். இயக்குனர் த்ரிசூல் கூறும்போது, ‘தலைப்பை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. சட்டப்படியும் இதை சந்திக்க தயாராக இருக்கிறேன். மற்றொரு மொழியில் வைத்த டைட்டிலை வேறு மொழி படத்துக்கு வைக்க எந்த தடையும் கிடையாது. கர்நாடக பிலிம்சேம்பரில் சட்டப்படி இதற்காக அனுமதி பெற்றிருக்கிறோம். எதற்காக நாங்கள் தலைப்பை மாற்ற வேண்டும்? இந்தியில் எடுக்கப்பட்ட படம் சில்க் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனது படம் வேறு மாதிரியாக இருக்கும். ஏக்தா கபூர் பட கதைக்கும் எனது பட கதைக்கும் சம்பந்தமில்லை என்றார்.

Comments