பாலாவால் ரீ-என்ட்ரியாகிறாரா பூஜா?!!!

Saturday, March, 31, 2012
தமிழ் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த பூஜா, இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 'ஜே ஜே' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. தொடர்ந்து 'அட்டகாசம்', 'ஜித்தன்', 'உள்ளம் கேட்குமே', 'பட்டியல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூஜா கடைசியாக இயக்குநர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் நடித்தார். படத்தில் கண் தெரியாத பிச்சைக்கார பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற பூஜாவுக்கு, இந்தபடத்திற்காக தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கிடைத்தது. ஆனால் அதன்பிறகு எந்தவொரு தமிழ் படத்திலும் கமிட் ஆகவில்லை பூஜா. இந்நிலையில் இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக பாலா படத்தில் நடித்த பூஜா, இப்போது ரீ-என்ட்ரியாக பாலா படம் மூலமே தமிழுக்கு வருகிறார். தற்போது அதர்வா வைத்து பாலா இயக்கும் படத்தில் பூஜாவும் ஒரு முக்கிய கேரக்டரில் வருகிறார். இதுதவிர துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தில் அருள்நிதி ஹீரோவா நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா நடிப்பதாக கூறப்படுகிறது. கண்ணாலம் ஆயிருச்சுனு கேள்விபட்டோமே.. நெசமாத்தானா அம்ணி?

Comments