ரோஜாவின் லக்கா கிக்கா...?!!!

Saturday, March, 31, 2012
வெள்ளித்திரையில் ஜொலித்த நடிகை ரோஜா, இப்போது சின்னத்திரைக்கு வந்துள்ளார். ஜீ தமிழ் டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் 'லக்கா கிக்கா' என்ற ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு வித ரவுண்டுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை நடிகை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் விடை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும். 2-வது ரவுண்டு திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார். 3-வது ரவுண்டில் ஏலம் விடும் நிகழ்ச்சி. 4-வது இறுதி ரவுண்டை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. நீங்களும் கடைய போட்டுட்டீங்களா...? அரசியல் என்னாச்சுக்கா...?!

Comments