Monday, March 26, 2012ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்து வரும் உதயநிதி, கூடவே 'நீர்பறவை' என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு நடிக்கிறார். ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். தம்பி ராமைய்யா, சரண்யா பொன்வன்னன், பிளாக் பாண்டி, அருள்தாஸ், தேவராஜ், ரோகினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்காக ரகுநந்தன் இசையமைப்பில் உருவான 'பர பர பர பறவை ஒன்று சிறு சிறுவென தலையை சுற்றி உன் காலில் விழுந்தது பெண்ணே' என்ற பாடலை இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ஆரோக்கியமான விஷயம் வாழ்த்துகள்! கீப் இட் அப் ஜீ.வி!
Comments
Post a Comment