Thursday, March 15, 2012வடிவேலு - சிங்கமுத்து இடையே எழுந்த நிலத் தகராறு, மோசடி வழக்குகள் ஊரறிந்த கதை. இந்த சீரியஸ் பிரச்சினையை ஒரு படத்தில் தமாஷாக்கியிருக்கிறாராம் இன்னொரு காமெடியன்.
அவர் விவேக்.. படம் கந்தா!
பாபு கே விஸ்வநாத் இயக்க, கரண் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. கொஞ்சம் டிலே ஆகி, அடுத்த வாரம் வருகிறது.
விவேக்கை நேரில் பார்த்தபோது, 'வடிவேலுவுக்கும் சிங்கமுத்துக்கும் நடுவே எழுந்த ரியல் எஸ்டேட் பிரச்னையை கந்தா படத்தில் சீண்டியிருக்கிறீர்களாமே?' என்று கேட்டோம்.
அதற்கு அவர், "கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்னையை வைத்து நான் ட்ராக் பண்ணியிருப்பது உண்மைதான். ஆனால், இது காமெடி ட்ராக் முடிந்து ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வடிவேலு பிரச்னை வெளிவந்தது.
அதற்கும் இதற்கும் எந்த தொடர்பு இல்லை.. கந்தா பட்ஜெட் படம் என்பதாலும், தியேட்டர்கள் கிடைக்காததாலும் இந்தப் படம் இப்போது தான் வருகிறது. வடிவேலுவிடம் கூட இதுதொடர்பாக பேசிவிட்டேன்," என்றார்.
Comments
Post a Comment