Tuesday, March 06, 2012பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் நடிக்கிறார்.
பிரியாமணி பற்றி சமீபத்தில் ஒரு வதந்தி பரவியது. சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த மது விருந்தில் பிரியாமணி பங்கேற்றதாகவும் அங்கு போதை தலைக்கேறிய 4 இளைஞர்கள் பிடியில் சிக்கி கஷ்டப்பட்டு மீண்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் பிரியாமணி அதிர்ச்சியாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது வதந்தி என்று பிரியாமணி மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
நடக்காத ஒரு சம்பவத்தை வதந்தியாக பரப்பி விட்டுள்ளனர். நான் சென்னைக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது. நட்சத்திர கிரிக்கெட் போட்டி முடிந்ததும் நான் கொச்சி சென்று விட்டேன். எனது சகோதரி குடும்பம் அங்கு இருக்கிறது. அவர் வீட்டில்தான் தங்கி இருந்தேன். சென்னைக்கு வரவும் இல்லை அங்கு பார்ட்டியில் பங்கேற்கவும் இல்லை. நடிகை என்றால் எது வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என்ற நிலைமை உள்ளது. இது வருத்தம் அளிக்கிறது.
Comments
Post a Comment