சம்பந்தி டார்ச்சரால் '3' பார்த்த ரஜினி!!!

Saturday, March, 31, 2012
நேற்று உலகம் முழுவதும் வெளியான '3' படத்துக்கு எக்குத்தப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப்படத்தின் தயாரிப்பாளரும், தனுஷின் அப்பாவுமான கஸ்த்தூரி ராஜா செய்து வரும் காமெடிகளைப் பார்த்து கெக்கே பிக்கே என்று சிரிக்கிறது கோடம்பாக்கம். சென்னையின் முக்கிய ஐந்து மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளின் முதல் நான்கு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை பிளாக் செய்த கஸ்துரி ராஜா, அவற்றை தனுஷின் மன்ற நிர்வாகிகள், மன்றதுக்கு நெருக்கமான ரசிகர்கள், உறவினர்கள், டிக்கெட் கேட்டு டார்ச்சர் செய்த திரையுலகினர் ஆகியோருக்கு இரண்டு மடங்கு விலையில் தனது மேனஜர்கள் மூலம் விற்று விட்டதாக புலம்புகிறார்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர். இதைவிட பெரிய புலம்பல் மீடியா வட்டாரத்தில் இருந்து.. "எந்திரனுக்குக் கூட இத்தனை பில்ட் அப் இல்ல.. இரவு பத்து மணி காட்சிக்கான டிக்கெட்டுகளை ஊடகத்தினருக்கு கொடுத்து வெறுப்பேத்தியிருக்கிறார்கள். பிள்ளை குட்டிகளை வீட்டில் தனியாக விட்டு விட்டு எப்படி இரவுக்காட்சிக்கு செல்வது" என்பது அவர் கேள்வி. இது பற்றி கஸ்தூரி ராஜாவிடம் எடுத்துச் சொல்லப்பட "அவங்க எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் எழுதிக்கட்டும். ஓசி டிக்கெட்டுக்கு என்ன அலட்டுறாங்க" என்றாராம்! மகள் ஐஸ்வர்யா தந்த குடைச்சலில் ஏற்கனவே இரண்டு முறை படம் பார்த்து க்ளைமாக்ஸையும் மாற்றச் சொன்னாராம் ரஜினி. 'கோச்சடையான்' படப்பிடிப்புக்கு கிளம்பும் வரை க்ளைமாக்ஸை மாற்றியாச்சா என்று கேட்டுக் கொண்டே இருந்த ரஜினிக்கு மகள் பதில் சொல்லாமல் நழுவி விட்டார் என்கிறார்கள். இதற்கிடையில் 'கோச்சடையான்' படப்பிடிப்பில் இருக்கும் ரஜினையை தனது யூனிட்டோடு லண்டனில் '3' படத்தை பார்த்தே ஆகவேண்டும் அப்போதுதான் அந்த செய்தியை வைத்து '3' படத்துக்கு 15 நாள் ஓபனிங் கிரவுட்டை புல் பண்ணி தியேட்டருக்கு இழுக்க முடியும் என்று ரஜினிக்கு நேரடியாக போனைப் போட்டு சம்பந்தி என்ற முறையில் டார்ச்சர் கொடுக்க, தப்பிக்க வழியில்லாமல் நேற்று லண்டனில் '3' படத்தை தனது குழுவுடன் ரஜினி பார்த்திருக்கிறார்.

Comments