ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு ஆசிரியரான தனுஷ்!!!

கொலவெறி பாடல் ஹிட் குறித்து ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு பாடம் நடத்த உள்ளார் நடிகர் தனுஷ். ஒரு பாட்டு ஒரு மனிதனை எங்கயோ கொண்டு போய் நிறுத்தும் என்றால் அது தனுஷ்க்கு தான் பொருந்தும். தேசிய விருது வாங்கிய போது கூட அவருக்கு கிடைக்காத பெயர் புகழ், எல்லாம் ஒரே ஒரு கொலவெறி பாடலில் கிடைத்திருக்கிறது. ஒரே பாட்டில் உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்து தனுஷ், ஒருபடி மேலே போய் பிரதமர் மன்மோகன் சிங்கின் விருந்தில் பங்கேற்கும் அளவிற்கு பிரபலமானார். இப்போது சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு ஆல்பம் அமைத்து வரும் தனுஷ், அடுத்தபடியாக ஐ.ஐ.எம்., மாணவர்களுக்கு பாடம் நடத்த போகிறார்.

ஆமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.ல் சி.எப்.ஐ., கோர்ஸ் படிக்கும் சுமார் 130 மாணவர்களுக்கு அவர் இன்று(07.02.12) பாடம் நடத்த உள்ளார். அதுவும் கொலவெறி பாடல் எப்படி இந்தளவுக்கு ஹிட்டானது, கோடிக்கணக்கான ரசிகர்களிடம் எப்படி இந்த பாடலை கொண்டு போய் சேர்க்க முடிந்தது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கவுள்ளார். தனுஷூடன் சேர்ந்து அவரது உறவினரும், கொலவெறி இசையமைப்பாளருமான அனிருத்தும் பாடம் நடத்த இருக்கிறார்.

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், ஆமதாபாத் ஐ.ஐ.எம்., மணவர்களிடம், கொலவெறி பாடலை எப்படி இந்தளவுக்கு ஹிட்டாக்க முடிந்தது என்பது பற்றி பேச அழைத்தார்கள். நானும் பேச உள்ளேன் என்று கூறியுள்ளார்கள்.

Comments