மைக்கேல் ஜாக்ஸன் பாணியில் பிரபுதேவா இசை ஆல்பம் தயாரிக்கிறார். சிறுவயதிலிருந்தே மைக்கேல் ஜாக்ஸன் ரசிகராக வளர்ந்தவர் பிரபுதேவா. ஒருமுறையாவது ஜாக்ஸனுடன் மேடையில் ஆட வேண்டும் என்பது அவரது ஆசை. அது நிறைவேறவில்லை. இந்நிலையில் தனது மற்றொரு கனவான மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, ‘‘மைக்கேல் ஜாக்சன் பாணியிலான மியூசிக் ஆல்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.
எனது நண்பர்கள் விஷ்ணுதேவா, போனி உள்ளிட்ட பலர் எனது கனவை நனவாக்க கைகொடுத்துள்ளனர். இதன் ரெகார்டிங் பணிகள் மும்பையில் விரைவில் தொடங்க உள்ளது. 7டி கேமிராவில் இது பதிவாகிறது. மற்ற விவரங்கள் பிறகு தெரிவிப்பேன்’’ என்றார். சர்வதேச தரத்தில் இசை ஆல்பத்தை உருவாக்குகிறார் பிரபுதேவா. இதையடுத்து தான் இயக்கும் ‘ரவுடி ரத்தோர்’ இந்தி படத்தின் 3வது கட்ட ஷூட்டிங்கை விரைந்து முடிக்கிறார்
Comments
Post a Comment