Wednesday,January,11,2012 12முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.
உன்னாலே உன்னாலே' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய், சமீபத்தில் நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட 'டேம் 999'. அணையை உடைக்காவிட்டால் 35 லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை கேரள அரசின் உதவியுடன் செய்தது இந்த படம். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
டேம் 999' படத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த வினய், விமலா ராமன் மீதும் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் வினய்யை வைத்து தயாராகும் புதுப்படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். ஆனால் வினய்யுடன் நடிப்பதால் தமிழ் ரசிகர்கள் என் மீது ஆத்திரப்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஞ்சலி!
அஞ்சலிக்கு தெரிந்தது கூட, வினய்யை வைத்து படமெடுக்க முயலும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியவில்லையே!
Comments
Post a Comment