Saturday, January 07, 2012எனக்கு இப்போது பண கஷ்டம் இல்லை; எனவே இனிமேல் நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன், என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த ஸ்ரேயாவை சமீப காலமாக எந்த படத்திலும் காண முடியவில்லை. அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தமிழில் கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார்.
வாய்ப்பில்லாமல் இருப்பது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால் வாய்கிழிய விளக்கம் அளிக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் இருக்கிறேன். என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன். நல்ல நடிகைகளுக்கு மார்க்கெட் என்ற வரையறையே கிடையாது. எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்றும் படவாய்ப்புகள் இல்லை என்றும் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. சினிமாவுக்கு வந்த புதிதிலும் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன். இப்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமில்லையே. இப்போது பணக்கஷ்டம் இல்லை. எனவே இனிமேல் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். இதை வைத்து எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று வதந்தி பரப்புகிறார்கள். எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு வேலை. ஒரு பாட்டுக்கு ஆடுவது, விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், சேவை அமைப்புகள் என நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment