Thursday,January 05, 2012தமது திருமண வாழ்க்கையால், தன் வாழ்வையும், சினிமா மார்க்கெட்டை தொலைத்த பிரசாந்த், விட்ட மார்க்கெட்டை பிடிக்க தீவிர முயிற்சியில் இறங்கியுள்ளார். அதுமட்டுமின்றி தான் ஒரு நல்ல நடிகர் என்பதை மம்பட்டியான் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் பிரசாந்த். தற்போது தன் கையில் மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் பிரசாந்த் மீண்டும் வெளி இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்துவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, 'அடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். மூணுமே பெரிய இயக்குனர்களின் படங்கள். அவர்களே அந்தப் படங்களைப் பற்றி கூறுவார்கள் என்பதால் இப்போது அதுபற்றி நான் பேசப் போவதில்லை. இந்த மூன்றுப் படங்களையும் முடித்தப் பிறகு மீண்டும் என் தந்தை இயக்கத்தில் நடிப்பேன்.' என்று கூறினார்.
Comments
Post a Comment