வீட்டிலிருந்தபடி திரிஷாவை இயக்கிய கவுதம் மேனன்.. வீடியோ வெளியீடு!

கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருந்த திரிஷா முன்னதாக அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் கவுதம் இயக்கத்தில் நடித்திருந்தார். மீண்டும், விண்ணை தாண்டி வருவாயா படத்தின் 2ம் பக்கத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதற்கிடையில் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாகிவிட்டனர்.

இதனால் இவர்கள் காம்பினிஷன் தள்ளிப்போகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு இருவரையும் இணைத்திருக்கிறது.இருவரும் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஒரு குறும்படத்தை உருவாக்குகின்றனர். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் திரிஷா வீடியோ வெளியிட்டிருக்கிறார்

கவுதம் மேனன் செல்போனில் வீடியோ காலில் திரிஷாவுடன் பேசுகிறார். அதில் திரிஷாவுக்கு கேமராவை எப்படி போக்கஸ் செய்ய வேண்டும் அடுத்து குளோஸ்அப் ஷாட் எடுப்பது பற்றியும் குறிப்புகள் தருகிறார். அதன்படி திரிஷா தயார் செய்து கொண்டு நடிக்க தயார் ஆகிறார். விரைவில் இந்த குறும்படத்தை திரிஷா வெளியிட உள்ளாராம்.

Comments