லாக்டவுனிற்கு பின் ரிலீசாக தயாராக இருக்கும் படங்களின் தொகுப்பு!

தமிழ் திரையுலகமே கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவால் பெரும் நஷ்டத்தை சந்த்தித்துள்ளது. இது தமிழ் சினிமாவில் மட்டும்மல்லாமல் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், மோலிவுட் மாற்றும் டோலிவுட் என்று அனைத்து திரைத்துறைக்கும் பொருந்தும். மேலும் திரைக்கு வரவிருந்த பல திரைப்படங்கள் தங்களது ரிலீசை தள்ளிவைத்த்துள்ளனர். தயாரிப்பில் இருந்த ஒரு சில திரைப்படங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் முதலாவது லாக்டவுனுக்குபிறகு அதாவது முதலில் அறிவிக்க பட்ட 21 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு தங்களது திரைப்படத்தை வெளியிடலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால் தற்போதைய சூழ்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து படங்களும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலை இங்கே காண்போம்!

மாஸ்டர்:
 
தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படத்திற்கு மக்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. ஏப்ரல் 9 ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் ஊரடங்கு காரணமாக எந்தவொரு தேதி அறிவிப்பும் இன்றி தள்ளி வைக்க பட்டுள்ளது.
 
சூரரை போற்று:
 
இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கராவுடன் சூர்யா இணைந்திருக்கும் படம் சூரரை போற்று.இந்த படம் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
 
டக்கர்:
 
கப்பல் திரைப்பதின் இயக்குனரான கார்த்திக்.ஜி.கிரிஷின் அடுத்த படம் டக்கர். இதில் சித்தார்த், யோகி பாபு, தான்ய கௌஷிக், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் OTT-யில் வெளி வரும் என்று பரவலாக பேசி வந்த நிலையில், திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்று அப்படத்தின் ஹீரோ சித்தார்த் அறிவித்துள்ளார். எனவே லாக்டவுனிற்கு பிறகு இந்தப்படத்தையும் நாம் எதிர்பார்க்கலாம்.
 
ஜகமே தந்திரம்:
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் உழைப்பாளர் தினத்தன்று திரைக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது. ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்க பட்டுள்ளது. இந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.
 
தலைவி:
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வராலற்றை திரைப்படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாத். இப்படமும் லாக்டவு

Comments