கொரோனா காரணமாகக் கிடைத்த ஊரடங்கு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் நடிகை கீர்த்தி பாண்டியன் விவசாயத்தில் களமிறங்கியுள்ளார்.கொரோனா அச்சம் காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள், வேலை இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு மக்களுடைய சாதாரண வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
திரையரங்குகள் மூடப்பட்டு, படப் பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 50 நாட்களுக்கும் மேலாக திரைத் துறையினர் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். எனினும் ஓய்வு நேரப் பொழுது போக்குகள், உடற்பயிற்சி வீடியோக்கள், சமையல் குறிப்புகள், கொரோனா விழிப்புணர்வு பதிவுகள் என்று சமூக வலைதளங்களில் அவர்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன், லாக் டவுன் காலத்தில் தனது நேரத்தை விவசாயம் செய்வதில் செலவிட்டு வருகிறார். கடந்த வருடம் வெளியான 'தும்பா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், தந்தை அருண் பாண்டியன் உடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் அவர், தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்யும் வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தது. தற்போது சேற்றில் இறங்கி நாற்று நடும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைத் தனது தந்தை அருண் பாண்டியன் எடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் அவர், 'நாங்கள் வெளியே செல்லவில்லை என்றும் இது தங்கள் நிலம் தான்' என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
One of the most grateful things I have ever done! Learning the craft, one step at a time ♥️
Had to pull in Driya baby for this one 👩🏽🌾
#niece #quarantine #farming
📸 Appa @iarunpandianc (Again, this is within our quarantine gated home property, it is not a public area) pic.twitter.com/jhKKwydvIS
— Keerthi Pandian (@ikeerthipandian) May 5, 2020Had to pull in Driya baby for this one 👩🏽🌾
#niece #quarantine #farming
📸 Appa @iarunpandianc (Again, this is within our quarantine gated home property, it is not a public area) pic.twitter.com/jhKKwydvIS
Comments
Post a Comment