குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு உத்தரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வெருதே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார்.
இந்த திரைப்படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார். அதே ஆண்டில் குருவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார். 2009ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் அரசி என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்தார்.
ஜில்லா , கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார்.இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ் ரசிகர்ளுடன் இணைப்பில் இருந்தவரை சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது உடம்பை குறைத்து சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். இவரது ரசிகர்கள் போட்டோக்கு கமாண்ட் அடித்து வருகின்றனர்.
Comments
Post a Comment