சின்னத்திரை நடிகை சரண்யாவின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதுதொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமான சரண்யா தனது அபார திறமையால் முன்னணி சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகின்றார். தற்போது ஆயுத எழுத்து எனும் சீரியலில் நடித்து வரும் இவர் ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டில் பொழுதைப் போக்கி வருகின்றார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நடிகை சரண்யாவின் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பலர் மேக்கப் இல்லாமல் கூட அழகா இருக்காங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். சரண்யா இலங்கை தமிழர் ஒருவரை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment