அஜீத்துடன் படம் வெளியிட்ட சர்ச்சை நடிகை!

நடிகை மற்றும் மாடல் அழகி மீரா மிதுன். நெட்டில் அடிக்கடி சர்ச்சையான படங்கள், கருத்துக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துபவர். 8 தோட்டாக்கள், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் அஜீத்துடன் நடித்திருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டார். ஆனால் திரையில் அப்படி ஒரு காட்சி வந்ததில்லை. இதற்கு மீராவே விளக்கம் அளித்திருக்கிறார். 'என்னை அறிந்தால் படத்தில் இடம் பெரும் காட்சி இது. தல அஜித்திற்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய முதல் படமே தல அஜீத்துடன் நடித்த படம் தான். எதிர்பாராத விதமாக இக்காட்சி பெரிய திரையில் இடம்பெறவில்லை. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி இருந்தார் ' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Comments