தல அஜீத்திற்கு நேற்று (மே 1) பிறந்தநாள். கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். எனவே தனது பிறந்த நாளன்று கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என ஏற்கனவே அஜீத் கேட்டுக் கொண்டார், இதையடுத்து அவரது ரசிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். ஆனாலும் சில ரசிகர்கள் தங்கள் தல பாசத்தை இணைய தளத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு நடிகர்களும் அஜீத்திற்கு பர்சனலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டைரக்டர்கள் வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா,அறிவழகன், நடிகர் அருண்விஜய், ராகவா லாரன்ஸ், ஜீவா, சிவகார்த்திகேயன், மகத் ராகவேந்திரா, பிரசன்னா, ஹரிஷ் கல்யாண், நடிகைகள் ராதிகா சரத்குமார், ராய்லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மு அபிராமி, இசை அமைப்பாளர் அனிருத், எஸ்.தமன், உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இதற்கிடையில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிக்கும் போனிகபூர், இப்படம் பற்றிய புரமோஷன் பணிகள் எதுவும் இப்போது இருக்காது. படத்தின் பர்ஸ்ட் லுக்கும் இப்போது வெளியிடுவதாக இல்லை. கொரோனா தொற்று ஊரடங்கு மற்றும் மக்கள் அச்சம் தீர்ந்தபிறகுதான் பட புரமோஷன் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment