படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷனின் முன்னாள் காதலி!

தமிழக அறிமுகமில்லாத புதிய முகம். சாப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர். கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் வெளிச்ச முகம் ஏதுமற்ற போட்டியாளர் இவர் தான்.ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவரது முன்னாள் காதலியும் மாடல் அழகியுமானவர் சனம் ஷெட்டி. இவர் அம்புலி, விலாசம், கதம் கதம் , வால்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 
இவர் கடந்த ஆண்டு சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார். அதில், தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஆனால் தர்ஷனோ சனம் ஷெட்டி அவரின் முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். சில நாட்கள் புகைந்த இந்த கதை பின்பு உப்பு சப்பு இல்லாமல் காணாமல் போனது.
 
இந்நிலையில் சனம் ஷெட்டி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் படுக்கையறையில் எடுத்துக் கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/B_m0UCUBddw/
 

Comments