அஜித்துக்காக விஜய் ரசிகர்கள் செய்த காரியம்.! இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து செம மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்!

அஜித் மற்றும் விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடக்கூடிய நடிகர்கள். இவர்களின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவர்.
மேலும் அஜித் மற்றும் விஜய் இருவருமே நண்பர்களாக பழகினாலும், அவரின் ரசிகர்கள் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டு கொண்டு தான் இருந்து வருகின்றனர்.
 
ஆனால் இன்று அதற்கு மாறாக விஜய் ரசிகர்கள் அஜித் பிறந்தநாளான இன்று அஜித்துக்கு வாழ்த்துகளை சொல்லி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் தல ரசிகர்கள் அஜித் பிறந்தநாளை வீதிகளில் கொண்டாடாமல் சமூக வலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்து சொல்லும் வகையில்#nanbarajith  என இந்திய அளவில் ட்ரெண்டாக்கி செம்ம மாஸ் காட்டி வருகின்றனர்.

Comments