தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன். ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் திரிஷா.
Comments
Post a Comment