மதுரையில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பையனாக சினிமா ஆசையை வளர்த்து கொண்டர் ராமராஜன்.பின்னர் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். சில ஆண்டுகளில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தை இயக்கி டைரக்டர் ஆனார்.
பின்னர் ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார். நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி மாபெரும் ஹிட்டானது. அதன்பின் ராமராஜன் நடிப்பில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், ‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணி என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். எனவே கிராமத்து ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாக உயர்ந்தார் கி-ராம ராஜா. கிட்டதட்ட 45 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறாராம் ராமராஜன். அதன்பின்னர் மெல்ல மெல்ல அவரது மார்க்கெட்டை இழந்தார். பின்னர் அண்ணன், அப்பா, மாமா, வில்லன் கேரக்டர்கள் என பல வந்தாலும் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இந்த நிலையில் நீண்ண்ணட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் இயக்கத்தில் இறங்கவிருக்கிறாராம். நடிகர் விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி அவரின் சம்மதம் பெற்று விட்டாராம். எனவே கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மக்கள் செல்வன் மற்றும் கி-ராமராஜன் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment