நடிகை வரலட்சுமி சரத்குமார் குடும்ப வன்முறைக்குள்ளாகும் பெண்கள் பற்றி கவலை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியதாவது:
கொரொனா ஊரடங்கில் பல பெண்கள் குடும்ப வன்முறைக்குள்ளாகியிருக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதுபோன்ற ஆபத்தில் சிக்கி இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களைக் காப்பாற்ற அரசு உதவி எண் அளித்திருக்கிறது. 1800 102 7282. இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் பாதிக்கப் பட்ட பெண்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள். உங்களுக்குத் தெரிந்த பெண்கள் இதுபோன்ற குடும்ப வன்முறையில் சிக்கி இருந்தால் அவர்களுக்கு இந்த எண்ணை ரகசியமாகக் கொடுங்கள் அவர்களின் குழந்தைகள் எதிரிலும் கொடுக்காதீர்கள், அவர்கள் மற்றவர்களிடம் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு வரலட்சுமி தெரிவித்திருக்கிறார்.

Comments
Post a Comment