கொரோனா லாக்டவுனில் ஆஸ்திரேலியாவில் சிக்கித் தவிக்கும் நடிகை!

கொரோனா லாக் டவுனுக்கு முன்பு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற சில நட்சத்திரங்கள் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கின்றனர். நம்மூர் நடிகர் பிருத்விராஜ் ஜோர்டானில் சிக்கிக்கொண்டிருக்கிறார். தனது திருமண நாளைக்கூட கொண்டாட முடியாமல் மனைவியைப் பிரிந்திருக்கிறார். தற்போது இந்தி நடிகை சாந்தினி பகவானி என்ற நடிகை படப்பிடிப்புக்காகச் சென்று ஆஸ்திரேலியா சென்று சிக்கிக்கொண்டிருக்கிறார். இவர் இந்தியில் சஞ்சீவினி 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தொழில் தர்மத்துக்காக ஆஸ்திரேலியா வந்து கொரோனா ஊரடங்கால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இங்கு தங்கியிருப்பது மிகவும் கடினமாக உள்ளது. எல்லாமே மிகவும் விலை அதிகம். தங்குவதற்கு இடம், உணவு போக்குவரத்து... என்னிடமிருந்த சேமிப்பு பணம் எல்லாம் செலவாகிவிட்டது, ஓட்டல் அறையிலிருந்து காலிசெய்து விட்டு இரண்டு பெண்களுடன் சேர்ந்து ஒரு குடியிருப்பில் ஷேரிங் செய்து தங்கியிருக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு இருக்கும் பேச்சுத் துணை இந்த இரண்டு பெண்கள் மட்டுமே இடையில் இந்தியா திரும்ப விமான டிக்கெட்டுக்கு முயற்சித்தபோது எல்லாம் ஃபுல் ஆகிவிட்டது. விமானத்தில் இந்த நேரத்தில் வரவும் பயமாக இருந்தது. எனவே லாக்ட்வுன் வரை அங்கேயே இருக்க எண்ணினேன்.

Comments