மாஸ்டர் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ரசிகர் ஒருவர் மாஸ்டர் பட டீம் கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பதுபோல் கார்ட்டூன் வெளியிட்டார். அதில் விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் ஏதோ வேலை செய்துகொண்டிருப்பது போல் இருக்க மாளவிகா மோகனன் மட்டும் கவர்ச்சி உடை அணிந்து சமையல் அறையில் இருப்பது போலவும் படங்கள் இடம்பெற்றிருந்தது.அதைக்கண்டு நொந்துபோன மாளவிகா சினிமா குடும்பத்திலும் பெண் சமையல் அறையில் இருப்பது போல தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் என்ற பாலின வித்தியாசம் என்று தான் மாறுமோ தெரிவில்லை என மனம் நொந்து கூறி உள்ளார். ஆனால் இந்த பதிவைச் சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார்.
Comments
Post a Comment