சமந்தா தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இது தவிர 2 தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். மேலும் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும் ஃபேமலிமேன் என்ற வெப் சீரிஸில் சமந்தா தீவிரவாதியாக நடிக்கிறார்.
சமீபத்தில் கொரோனா ஊரடங்கில் இருக்கும் சமந்தாவுக்குப் பிறந்த நாள் வந்தது. வீட்டில் அவரது கணவர் நாக சைதன்யா கேக் செய்து தர அதை வெட்டி எளிமையாகப் பிறந்த நாள் கொண்டாடினார். பலரும் அவருக்கு போன் மூலமும்., டிவிட்டரிலும் வாழ்த்துக் கூறினார். அதேபோல் ஃபேமலிமேன் டீம் சமந்தாவை செல்போனில் கான்பிரன்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு சர்ப்ரைசாக வாழ்த்துக் கூறினர். இயக்குனர் ராஜ் மற்றும் டிகே, ஹீரோ மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட சீரிஸில் பங்கேற்கும் அனைவரும் கான்பிரன்ஸ் காலில் பேசி சமந்தாவுக்கு வாழ்த்துக் கூறி திக்குமுக்காட வைத்தனர்..
Comments
Post a Comment