பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா. தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரைசா வீட்டில் முடங்கியுள்ளார்.
வீட்டில் சும்மா இருப்பதால் ரைசா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். ரசிகர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் தன்னை பற்றி வரும் கமெண்ட்டுகளுக்கும் பதில் அளிக்கிறார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ரைசாவை பற்றி வடிவேலு மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். அதாவது வடிவேலு ரைசாவிடம் பேர் என்ன என்று கேட்க, அதற்கு அவர் ரைசா என்கிறார். அதற்கு வடிவேலு சிக்கன் ரைசா இல்லை எக் ரைசா என்று கேட்கிறார்.இந்த மீம்ஸை பார்த்த ரைசா கூலாக பிரியாணி ரைஸ் என்று கமெண்ட் போட்டுள்ளார். ரைசா போட்ட கமெண்ட்டை பார்த்த ரசிகர்களோ, இது தான் உங்களிடம் பிடிச்ச விஷயம் என்று தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment