ஷாமா சிகந்தர் .துணிச்சலான நடிகை.கருத்து சுதந்திரம் இருக்கிறது.அதை பயன்படுத்தாமல் விட்டால் துரு பிடித்து விடாதா ? இற்றுப் போய் விடாதா? இப்படி மிகவும் கவலைப்படுவார். ஒரு தடவை “பிள்ளை பெத்துக்கணும்கிறதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்கிறது அவசியமில்லை ” என்று உச்சம் தலையில் அடித்து சொன்னவர் ஷாமா மான் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நிகழ்வு.அந்தப் படத்தில் ஆமிர்கான் ,மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர்.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு மத்தியில் ஆமீர்கான் ஷாமா உள்பட பல பிரபலங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.பேச்சு மனித உடலமைப்பு பற்றியதாக இருந்தது.“ஏதாவது ஒரு மிருகத்தின் சாயல் மனிதனிடம் இருக்கும். இப்ப ஷாமாவை பார்க்கிறபோது மானின் நினைவு வருகிறது” என்றிருக்கிறார் ஆமீர்.“அப்படியா “என்று சிலிர்த்துப் போனார் நடிகை ஷாமா .
“நான் அப்படியா இருக்கிறேன்? எதை வைத்து சொல்லுகிறீர்கள் ?”“உன்னுடைய கண்கள்,காது !மானை நினைவு படுத்துகிறது. எங்களை பார்த்தால் என்ன ஞாபகம் வருகிறது சொல்?”என்று கேட்டிருக்கிறார் ஆமீர் .
Comments
Post a Comment