அப்போ, பில்லோ சேலஞ்ச்! இப்போ, நியூஸ்பேப்பர் சேலஞ்ச்! உக்காந்து யோசிப்பாங்களோ!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வருகின்ற மே மூன்றாம் தேதி வரை இந்தியா முழுவதும் நடிகர் நடிகைகள் வீட்டில் முடங்கி இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு  பில்லோ சேலஞ்ச் வந்தது.அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த பில்லோ சேலஞ்ச் பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட்

Comments