பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர். பாரதிராஜா இயக்கத்தில் கமல். ரஜினி. ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் அவர்பாடிய செந்தூரப்பூவே பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்பாடலுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருக்கும் பாடகி சைந்தவி செந்தூரப்பூவே பாடலை பாடி வீடியோ வெளியிட்டிருக்கிறார். எஸ்.ஜானகிக்கு மரியாதை செய்யும் விதமாக இப்பாடலை அவர் பாடி இருக்கிறார்.இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் மனைவி சைந்தவி சமீபத்தில்தான் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மேலும் அந்நியன் படத்தில் அண்டங்காக்க கொண்டக்காரி உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Comments
Post a Comment