அவர் சொன்னார் என்பதற்காக சும்மா இருக்க முடியுமா.. ரஜினி பேச்சை மீறிவிட்டோம் - இயக்குநர் பேரரசு

நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை மீறி விட்டதாக கூறி இயக்குநர் பேரரசு டிவிட்டியிருக்கிறார்.கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு 30 நாட்களை தாண்டி விட்டது. இதனால் கடந்த 30 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அதேநேரத்தில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாத்துறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர்கள் பலரும் உதவி வருகின்றனர்.
 
ரஜினிகாந்த் உதவி அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர்கள் சங்கத்திற்கு கேட்காமலேயே உதவி செய்த தகவல் வெளியானது. 1500 பேருக்கு உதவும் வகையில் 10 கிலோ எடை கொண்ட அரசி மூட்டைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் என மொத்தம் 24 டன் எடை கொண்ட பொருட்களை இயக்குநர்கள் சங்கம் அறிக்கை இதனைத்தொடர்ந்து கேட்கமாலேயே நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவியால் நெகிழ்ந்த இயக்குநர்கள் சங்கள் அவரை வாழ்த்தியும் பாராட்டியும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இயக்குநர்கள் சங்கம் நன்றி அறிக்கை வெளியட்ட பிறகே ரஜினிகாந்த் உதவிய விவகாரம் வெளியில் வந்தது.
 
கட்டளைளை மீறிவிட்டோம் இந்நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் பேரரசு டிவிட்டியிருக்கிறார். அதில், ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிக்கைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் "என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம் பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது! என தெரிவித்துள்ளார்.
கருணை உள்ளம் அதற்கு முன்னதாக ஊரடங்கின் காரணமாக எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் பலரின் வாழ்வாதாரம் பாதித்திருப்பதை மனதில் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கருணை உள்ளத்தோடு எங்கள் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அரசி மூட்டையும்,மளிகை பொருட்களும் வழங்கியுள்ளார். என குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய அரிசி மூட்டைகள் மற்றும் மளிகைப் பொருட்களின் போட்டோக்களையும் அவற்றை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.


Comments