சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த, இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.மேலும் நடிகை மீனா தற்போது வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார், மிக பிரம்மாண்டமாக உருவாகும் அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதால், இவரின் கதாபாத்திரம் என்னவாக இருக்குமென ரசிகர்களிடையே பெரிய கேள்வி எழுந்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த உடன் மீனா எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட திரைப்படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடிகை மீனா சமீபத்தில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார், அப்போது ஒரு சில ரசிகர்கள் அவரை அண்ணி என்றே அழைத்துள்ளனர், மேலும் அண்ணாத்த திரைப்படத்தின் அப்டேட் கேட்டும் நச்சரித்துள்ளனர்.இதற்கு பதிலளித்த மீனா "அண்ணாத்த திரைப்படத்தில் நான் அண்ணியா இல்லையா என்பது செப்டம்பர் மாதம் தெரிந்துவிடும்" என கூறியுள்ளார்.
Comments
Post a Comment