கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் நடிகர்-நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில், ஹன்சிகாவுக்கு மிகவும் உதவியாக இருப்பது, அவரது மொபைல் போன் தான். பெரும்பாலான நேரங்களை, மொபைல் போனுடன் தான் செலவிடுகிறார்.சமூக வலைதளங்களில் கருத்துகள், புகைப்படங்களை பதிவிடுவது உள்ளிட்ட எல்லாவற்றுக்குமே மொபைல் போன் உதவியைத் தான் நாடுகிறார். 'மொபைல் போன் இல்லாத வாழ்க்கையை, நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை' எனக் கூறி வருகிறாராம்.
Comments
Post a Comment