அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. ஷாலினியிடம் இருந்த நிதானம் தான் அஜித்தை வெகுவாக கவர்ந்தது. சின்ன வயதில் இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிதானமா என்று அஜித் வியந்தார். நடிகையை மட்டும் கல்யாணம் செய்யாதீங்க, வாழ்க்கை வீணாகிவிடும் என்று இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா அஜித்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதையும் தாண்டி அஜித் ஷாலினியிடம் தனது காதலை சொல்லி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
அஜித், ஷாலினிக்கு திருமணமாகி இன்றுடன் 20 (24.04.2020)ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு அனௌஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இன்று திருமண நாளை கொண்டாடும் அஜித், ஷாலினி தம்பதிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்பே அஜித் ஷாலினிக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அதாவது ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். மாதத்தில் 15 நாட்கள் ஷூட்டிங் என்றால் மீத 15 நாட்கள் வீட்டில் தான் இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை இன்று வரை காப்பாற்றி வருகிறார்.
கோலிவுட் கொண்டாடும் தம்பதிகளில் ஒன்று அஜித்-ஷாலினி ஜோடி. முன்பு சிம்பு கூட ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டு அஜித், ஷாலினி போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஒரு காலத்தில் ஆங்ரி யங்மேனாக இருந்த அஜித்தை இப்படி சாந்தமாக மாற்றிய பெருமை ஷாலினியையே சேரும். நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அந்த வரம் அஜித்துக்கு கிடைத்துள்ளது.
திருமண நாள் வாழ்த்துக்கள்
Comments
Post a Comment