அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் சமீபத்தில் போனிகபூரை சந்தித்ததார். இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர். நிக்கிகல்ராணி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
சர்வதேச தீவிரவாதி ஒருவனை பிடிக்க தமிழக போலீஸ் சார்பில் ஒரு டீம் அமைக்கப்படுவதாகவும் அந்த போலீஸ் டீமின் அஜித் தலைமையிலான மொத்தம் ஆறு பேர் இருப்பதாகவும் அதில் நான்கு பேர் பெண்கள் என்றும் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அஜித்துடன் நடிக்கும் நான்கு நாயகிகள் முடிவாகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு பிரபல நடிகரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அனேகமாக அர்ஜூன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேஸ்கள் என விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் என முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது
அதேபோல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேஸ்கள் என விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் என முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது
Comments
Post a Comment