காலா பிலிம்ஸ் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்துள்ள படம் தோழர் வெங்கடேசன். புகைப்படங்கள் பார்வையிட இங்கே கிளிக்செய்யவும்-Click here to view photos
வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுகொள்ள, இசை அமைப்பாளராக சகிஷ்னா அறிமுகமாகிறார். இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் மகாசிவன்.
படத்தின் கதை இதுதான். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் வெங்கடேசன். கடைகளுக்கு சோடா, குளிர்பாணம் சப்ளை செய்யும் இளைஞர். அவருக்கும் ஒரு எளிய காதல் இருக்கிறது. பஸ் விபத்து ஒன்றில் அவரது இரு கைகளும் துண்டாகி விடுகிறது. அதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானம் இல்லை. விபத்து பற்றி வழக்கு நடக்கிறது. அந்த வழக்கில் வெங்கடேசனுக்கு நஷ்ட ஈடாக விபத்து ஏற்படுத்திய பஸ்சை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
வெங்கடேசனின் சாதாரண குடிசை வீட்டு முன் அந்த பஸ் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. அந்த பஸ்சை வைத்துக் கொண்டு வெங்கடேசன் படும் அவஸ்தைகள் தான் படம். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதையும், அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களையும் சுட்டி காட்டுகிறது படம். சுசீந்திரன் படத்தை வெளியிடுகிறார்.

Comments
Post a Comment