நடிகர் விமல் மற்றும் ஓவியா நடிப்பில் 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது, இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விமல் மற்றும் வரலட்சுமி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கன்னிராசி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சாரிலும் 'யூ' சான்றிதழ் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
ஆனால் ஒருசில காரணங்களால், ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
விமல், வரலட்சுமி சரத்குமார், பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/9jBNN_0eQVM
Comments
Post a Comment