ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாரண்ட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்க மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.திரைப்படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் ஊடகம் பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் எனும் நிறுவனம் ரூ 2 கோடி கடனாகப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர். ஆனால் அந்தக் கடனை இன்னும் திருப்பி செலுத்தாமல் உள்ளதாக சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இதுசம்மந்தமாக நேற்று நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் ஆஜரராகதால் அவர்களுக்கு இவர்கள் மூவருக்கும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது.ஆனால் இந்த வாரண்ட்டுக்கு எதிராக ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது அதை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் அவர்கள் மூவரும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
Comments
Post a Comment