கண்களால் பலாத்காரம் நடிகை புகாரால் பரபரப்பு!

இரண்டு பாதுகாவலர்கள் சுற்றி இருந்தபோதும் கண்களால் என்னை ஒருவர் பலாத்காரம் செய்தார் என்று பரபரப்பு புகார் கூறியிருக்கிறார் நடிகை இஷா குப்தா. ‘இவன் யார்’ தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதுடன் இந்தியில் ரஸ்டம், கமாண்டோ 2, பாட்ஷாஹோ, தெலுங்கில் வீடெவடு, வினயா வித்யேலயா ராமா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் இஷா குப்தா.
 
இவர் டெல்லி சென்றபோது, ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது, தன்னை ஒரு நபர் கண்களால் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருக்கிறார். இதுபற்றி இஷா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஒரு நபர் என்னை கண்களால் பலாத்காரம் செய்தார். அவரை ஒன்றுக்கு 3 முறை நகர்ந்து போக சொல்லியும் போகவில்லை.
 
இத்தனைக்கும் என்னை சுற்றி எனது 2 பாதுகாவலர்கள் இருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் இந்த சம்பவத்தை விளக்கும். யார் அந்த எதிர்கால பலாத்கார பேர்வழி. இந்த நாட்டில் என்னை போன்றவர்கள் மீதே இப்படி அத்துமீறல் நடக்கும்போது, சாதாரண பெண்களின் நிலைமை என்ன? என்னை சுற்றி 2 பாதுகாவலர்கள் இருந்தும் நான் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறேன்.
 
இப்படிப்பட்ட ஆண்களால்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறார்கள். என்னை அந்த நபர் தொடவில்லை, வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் நீண்ட நேரம் முறைத்து பார்த்தபடியே இருந்தார். அவர் எனது ரசிகரோ அல்லது ஒரு நடிகரோ அல்ல. இந்நிலையில்  பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். ஆண்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நான் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்ேதன். பின்னர் வந்த அந்த நபர், எனக்கு எதிர் டேபிளில் அமர்ந்து கொண்டார். அந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள். இவ்வாறு இஷா குப்தா கூறியிருந்தார்.

Comments