பத்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் சுந்தர தாய்மொழி எனும் குறும்படத்தை தயாரித்து நடித்துள்ளார் ஆரி. இந்த குறும்படம் சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் சிறப்பு காட்சி யாக திரையிடப்படவுள்ளது. மேலும் இதில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவையும் நடத்த உள்ளார்.
அதனை தொடர்ந்து உலக குறும்பட விழாக்களுக்கு இக்குறும்படத்தை எடுத்து செல்ல உள்ளார். இக்குறும்படத்ததை குரு.ழி.நாராயணன் இயக்கியுள்ளார். “நெடுஞ்சாலை” திரைப்பட புகழ் சத்யா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ‘அண்ணாதுரை’ திரைப்பட புகழ் தில்ராஜூம், எடிட்டிங்கை தேசிய விருது வாங்கிய சாபு ஜோசப்பும் செய்துள்ளனர். உலக தமிழ் சங்க மாநாட்டில் கீழடி நம் தாய்மடி என்ற மையகருத்தை வலியுறுத்தி நடைபெறுகிறது.
இவ்விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா, சீர்காழி சிவசிதம்பரம் முதலிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
Comments
Post a Comment