பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு திருமணம்-குவியும் வாழ்த்துகள்!

பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு நேற்று  இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஏ.எல். விஜய். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக இவர் கால்பதித்தார். அதை தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்தார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களாக அமைந்தன.
 
தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இருவருமே மறுத்தனர். அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
அப்போது இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. விரைவில் இவர்களுக்கு திருமண அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்பார்த்தது போலவே, தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்குவதற்கு ஏ.எல். விஜய் ஆயத்தமாகி வருகிறார். இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.
 
பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2வது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதன்படி சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற இவர், பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு மிகவும் எளிமையான முறையில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மணமக்கள் மற்றும் விஜய்யின் பெற்றோர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிக பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments