நல்லாப் பாத்துக்கங்க அடுத்த ரஜினி படத்தயாரிப்பாளர் நானேதான்’என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக ஊரெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. ஆனால் இந்தத் தகவல் ரஜினிக்குத் தெரியுமா என்பதுதான் தெரியவில்லை.
ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் இருத்தியில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து அடுத்த படத்துக்கு ரஜினி தயாராகிவிடுவார். ஆனாலும் இதுவரை ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூவமாக எந்தத் தகவலும் இல்லை.இயக்குநர்கள் பட்டியலில் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், மற்றும் தற்போது நேர்கொண்டபார்வை இயக்கியிருக்கும் எச்.வினோத் ஆகியோர் ரஜினியின் பரிசீலனையில் இருக்கும் இயக்குநர்கள் என்று சொல்லப்படுகிறது.இவர்கள் சொல்லும் திரைக்கதையே ரஜினியின் அடுத்த இயக்குநர் யார்? என்பதை முடிவு செய்யும்.
இயக்குநர் யாராக இருந்தாலும் சரி, ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர்தான் என்று திரையுலகில் சொல்லப்படும் பெயர் கலைப்புலிதாணு.இவர் கபாலி திரைப்படத்தைத் தயாரித்தார், காலா திரைப்படத்தை வெளியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று ரஜினியின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.அதன் காரணமாகவே ரஜினி தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை கலைப்புலி தாணுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தாணுவே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்படி தொடர்ந்து செய்திகள் பரப்புவதன் மூலம் மற்ற தயாரிப்பாளர்கள் ரஜினியை அணுகுவது குறையும் என்பது கலைப்புலியாரின் கணக்கு.
Comments
Post a Comment