ஜான்சன் இயக்கத்தில், A1 படத்தின் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார் சந்தானம்.
இவருடன் ரித்திகா சென், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 18 ரீல்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்பி சௌத்ரி தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க விஜய்நரைன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் "டகால்டி" திரைப்படத்திற்காக சந்தானம் உடல் எடையை குறைத்து சிலிம்மாகியுள்ளார். ஏற்கனவே மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment